வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்


வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Sept 2021 11:57 PM IST (Updated: 20 Sept 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கமிஷனர் ஆய்வு செய்தார்.


வேலூர்

வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கமிஷனர் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

வேலூர் மாநகர பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் செல்வதை தடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று முதல் ஒருவாரம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பொக்லைன் மற்றும் 2 டிப்பர் லாரிகள் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 2-வது மண்டலம் காகிதப்பட்டறை சாரதிநகர், சிப்பந்திகாலனியில் பொக்லைன் எந்திரம் மூலம் கானாறு தூர்வாரப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆய்வு செய்தார். மேலும் ஸ்ரீராம்நகர் பகுதியில் உள்ள கானாறு தூர்வாரப்படுவதையும் ஆய்வு செய்தார்.

ஒருவாரம்

இதுகுறித்து கமிஷனர் சங்கரன் கூறுகையில், தற்போது மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் தூர்வாரப்படுகிறது. கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி ஒரு வாரம் நடக்கிறது. இதற்காக 10 பொக்லைன் மற்றும் 10 லாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் செல்வதை தடுக்க முடியும் என்றார். இந்த ஆய்வின் போது 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story