வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணி


வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 21 Sept 2021 1:05 AM IST (Updated: 21 Sept 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் பகுதிகளை தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் பகுதிகளை தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தூர்வாரும் பணி
வடகிழக்கு பருவமழையையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் பகுதிகள் தூர்வாரும் வகையில் ஒருவார கால மாபெரும் தூய்மைப்பணி திட்டத்தை செயல்படுத்தபடவுள்ளது. சிவகங்கை தெப்பக்குளத்திற்கு செல்லும் வரத்து கால்வாய் து£ர்வாரும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார். இதையொட்டி அவர் நகராட்சி து£ய்மை பணியாளர்களுடன் சேர்ந்து சிவகங்கை மன்னர் மேல்நிலைபள்ளி வழியாக செல்லும் வரத்துகால்வாயில் வளர்ந்திருந்த செடிகளை அரிவாளால் வெட்டி அப்புறப்படுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது&
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் நகராட்சி. பேரூராட்சி, மற்றும் ஊ£ட்சி பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் ஊருணிகளுக்கு செல்லும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படவுள்ளது இதன் அடிப்படையில் நேற்று தொடங்கி வருகிற 25&ந்தேதி வரை ஒருவாரகாலத்திற்கு மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ள தமிழக முதல்&அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு கவசம்
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும், 12 பேரூராட்சி பகுதிகளிலும், 445 ஊராட்சிகளிலும் இந்த பணி தொடங்கப்பட்டு உள்ளன. சிவகங்கை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை. நகராட்சியைப் பொறுத்தவரை 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சிவகங்கை நகராட்சி பகுதியில் 61 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெறவுள்ளது.
 இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசம் அளித்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, சுகாதார அலுவலர் விஜயகுமார் சுகாதார ஆய்வாளார் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story