மாவட்ட செய்திகள்

தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம் + "||" + Struggle

தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம்

தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ராஜபாளையம் 
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்  தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ராஜபாளையம்  நகர அலுவலகம் முன்பு தனுஷ் எம்.குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டன் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஷியாம் ராஜா, கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி முன்பு ராஜபாளையம் ஒன்றிய தலைவர் சிங்கராஜா தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி, கிளைச்செயலாளர்கள் பாலகுமார், கருப்பையா, பால்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தளவாய்புரம் 
அதேபோல தளவாய்புரம், சேத்தூர் பஸ் நிலையம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் ராமர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று ஜமீன் கொல்லங்கொண்டான் தி.மு.க. கிளை செயலாளர் வன ராஜன், செட்டியார்பட்டி நகர தி.மு.க. செயலாளர் இளங்கோவன், சேத்தூர் நகர தி.மு.க. செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி ஆகியோர் தங்கள் வீட்டின் முன்பு கருப்புக்கொடி கட்டி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்து முன்னணியினர் போராட்டம்
தாணிப்பாறையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம்
சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
3. உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம்
உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
4. வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த எம்.எல்.ஏ.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த எம்.எல்.ஏ.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
5. தேத்தாம்பட்டி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரி2-வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.