கல்லூரி சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


கல்லூரி சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2021 1:28 AM IST (Updated: 21 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது

மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் மனைவி சுகன்யா(வயது 31). இவர் பேராவூரணி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல, தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். கட்டுமாவடி பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத 2 நபர்கள் சுகன்யாவின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் சுகன்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசில் சுகன்யா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Next Story