ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சேலம், செப்.21&
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கிய ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தனியார் பள்ளி ஆசிரியர்
சேலம் பெரமனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 38). இவர் சேலம் மாவட்டம் கரியகோவில் அருகே கலக்கம்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2012&ம் ஆண்டு இவருக்கும், 30 வயதுடைய பட்டதாரி பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து திடீரென அந்த பெண்ணை செந்தில்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் இதுகுறித்து அந்த பெண் கரியகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக ஆசிரியர் செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
===========
Related Tags :
Next Story