கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 2:41 AM IST (Updated: 21 Sept 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
கங்கைகொண்டான் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக, கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுடர்மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஏர்வாடி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, ஏர்வாடி பஸ்நிலையம் அருகே கஞ்சா விற்றதாக, கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (24), சேசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story