முன்விரோதம் தொடர்பாக தாக்குதல்; 4 பேர் கைது


முன்விரோதம் தொடர்பாக தாக்குதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 2:55 AM IST (Updated: 21 Sept 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக நடந்த தாக்குதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்சுருட்டி:

தாக்குதல்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிபள்ளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்ராபதி(வயது 36). இவர் நேற்று முன்தினம் சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டுக்கொல்லை அருகே தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, மீன்சுருட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் கங்கைகொண்டசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல்(49) அங்கு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக அவரை, உத்திராபதி திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெற்றிவேல் தனது அண்ணன் ரவி(52) என்பவருக்கு போன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு ரவி, கார்த்திக்(44), சுந்தர்(35) மற்றும் செல்வம்(30) ஆகியோர் வெற்றிவேலுடன் சேர்ந்து உத்திராபதியை சிறிய கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உத்திராபதியை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து உத்திராபதி கொடுத்த புகாரின் பேரில் வெற்றிவேல், ரவி, கார்த்திக், சுந்தர் மற்றும் செல்வம் ஆகியோர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து ரவி மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
கைது
இதேபோல் சுண்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தாராசிங்(33), உத்திராபதி மற்றும் கார்த்திக் (32) ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் வெற்றிவேல் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வெற்றிவேலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வெற்றிவேல் மீன்சுருட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தாராசிங், கார்த்திக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story