கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு


கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Sept 2021 2:55 AM IST (Updated: 21 Sept 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் புதுத்தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 40). சம்பவத்தன்று சிவக்குமார் அந்த தெருவில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் சேகர், சேகரின் மனைவி சித்ரா, மாமியார் பன்னீர்செல்வி, மகன் அய்யப்பன் மற்றும் 2 பேர் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் அவரை குத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிவக்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story