ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 15 பேர் கைது


ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 15 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 4:42 AM IST (Updated: 21 Sept 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 15 பேரை கைது செய்தனர்.

தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14&ந் தேதி முதல் 19&ந் தேதி வரை தீவிர சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்ததாக 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story