ஓட்டலை சூறையாடிய 2 பேர் கைது
தினத்தந்தி 21 Sept 2021 5:02 AM IST (Updated: 21 Sept 2021 5:02 AM IST)
Text Sizeசாம்பவர்வடகரையில் ஓட்டலை சூறையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே பூப்பாண்டியபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேர்ம அருணாசலம் (வயது 35). இவர் சாம்பவர்வடகரை பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது ஓட்டலுக்கு மதுபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்கள் ஆபாயிலுக்கு கூடுதலாக மிளகு பொடி கேட்டனர். அதனை கொடுக்க தாமதமாகவே அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஓட்டலை சூறையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில், சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பன் (42), பாஸ்கர் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire