மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2021 11:40 AM IST (Updated: 21 Sept 2021 11:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை குறைக்க  வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், வேலையில்லா திண்டாட்டம், பெகாசஸ் ஒட்டு கேட்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தி, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான செங்குட்டுவன், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மோகன், நிர்வாகிகள் அஸ்லாம், கடலரசுமூர்த்தி, ராஜா, கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர் எம்.எல்.ஏ.
இதேபோல் கிருஷ்ணகிரி காந்தி நகர் பகுதியில் உள்ள பர்கூர் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான மதியழகன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சங்கர், தொ.மு.ச. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கருப்பு கொடிகள் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி ஒன்றியம் தளவாய்ப்பள்ளி கிராமத்தில் உள்ள மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகன் தலைமையில் அவருடைய வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், ராஜசேகர் மற்றும் உமாபதி, சிவராஜ், சிவசுப்பிரமணி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் நவாப் தனது வீட்டின் முன்பு கேஸ் சிலிண்டருக்கு நாமம் இட்டும், மாலை அணிவித்தும், கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில், நகர அவைத்தலைவர் தர்மன், நிர்வாகிகள் நூர்முகமது, பொன்.குணசேகரன், மாதவன், கனல் சுப்பிரமணி, ஜமுனா புருஷோத்தமன், மதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story