விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு


விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 21 Sept 2021 1:42 PM IST (Updated: 21 Sept 2021 1:42 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்

ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையை சேர்ந்தவர் நாடியான். இவரது மகன் சிவாஜி (வயது 34). இவர் ஆலங்குடியில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். கடந்த 17ந் தேதி மாலை இங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கும்மங்குளம் சாலையில் சென்றபோது அந்த வழியாக சேவியர்ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவாஜியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவாஜி படுகாயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 19 ந் தேதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story