திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை கட்டுமான பணி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம், காங்கேயம், உடுமலை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவான எந்திரங்கள் கலெக்டர் அலுவலகம் அருகே வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரிகள் வைத்து எண்ணப்பட்டன. தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதற்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு இடங்களில் உள்ள இருப்பு அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. இதற்கிடையே வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்வேறு இடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்திரங்களை எடுத்து வருவது மற்றும் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தது.
கட்டுமான பணி தீவிரம்
இதனால் இந்த சிரமத்தை போக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் வகையில் அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கட்டுமான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட உள்ளன.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரே இடத்தில் வைக்கப்படும் போது, அவற்றை கையாள்வதற்கு சுலபமாக இருக்கும். இதுபோல் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்புவதற்கும், அங்கிருந்து கொண்டுவருவதற்கும் எளிதாக இருக்கும். இதுபோல் பாதுகாப்புடனும் எந்திரங்கள் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story