கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை 30ஆவது வார்டு பாரதி நகர், 4ஆவது தெரு மற்றும் ஓடை தெருவில் ரோடு போடுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த ரோட்டை தோண்டி போட்டு விட்டு, வேலை நடத்தாமல் சென்றுவிட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவ&மாணவிகள், வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான ரோட்டில் செல்வதற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். இதை கண்டித்தும், வாறுகால்களை புதுப்பித்து ரோடு போடும் பணியை உடனடியாக தொடங்க நகரசபை நிர்வாகத்தை வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியினர் ரோட்டில் வாழை மரக்கன்றுகளை நட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி பாரதிநகர் கிளை பொறுப்பாளர் முகிலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர் மருதம், மாரியப்பன், பொறுப்பாளர்கள் பெருமாள்சாமி, கருப்பசாமி, செய்தித்தொடர்பாளர் பிரான்சிஸ், நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story