விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு
மயிலாடும்பாறை அருகே விவசாயி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது
கடமலைக்குண்டு:
மயிலாடும்பாறை அருகே உள்ள ஆலந்தளிர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. நேற்று காலை இவர், வழக்கம் போல தோட்டத்துக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டுக்குள் 4 அடி நீள நல்ல பாம்பு இருந்ததை கண்டு ராஜா அதிர்ச்சி அடைந்தார். அதனை அடிக்க முயன்ற போது, தென்னங்கீற்றால் ஆன மேற்கூரைக்குள் புகுந்து மறைந்து விட்டது.
இதுகுறித்து மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு ராஜா தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அந்த பாம்பை உயிருடன் பிடித்து, அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story