ரெட்டியார்சத்திரத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி மூடல்
ரெட்டியார்சத்திரத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலியாக அரசு தோட்டக்கலை கல்லூரி மூடப்பட்டது.
கன்னிவாடி:
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 135 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்தததை அடுத்து இந்த கல்லூரியில் கடந்த 1-ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் அந்த கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மற்றும் மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் மூடப்பட்டன. முன்னதாக அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story