தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியான செய்திகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி:
தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைப்பு
நாகை மாவட்-டம் கீழ்-வே-ளூர் தாலுகா அக-ரக்க-டம்-ப-னூர் அக்ர-ஹா-ரம் மேலத்-தெ-ரு-வில் பல ஆண்-டு-க-ளாக தாழ்-வாக சென்ற மின்-கம்-பியை சீர-மைக்க வேண்-டும் என பொது-மக்கள் கோரிக்கை விடுத்து வந்-த-னர். இது-கு-றித்து தினத்-தந்தி புகார் பெட்-டி-யில் செய்தி வெளி-யா-னது. இதன் எதி-ரொ-லி-யாக சம்-பந்-தப்-பட்ட மின்-வா-ரிய அதி-கா-ரி-கள், தாழ்-வாக சென்ற மின்-கம்-பியை சீர-மைத்-த-னர். உடன் நட-வ-டிக்கை எடுத்த அதி-கா-ரி-களுக்கும், செய்தி வெளி-யிட்ட தினத்-தந்தி நாளி-த-ழுக்கும் நன்றி தெரி-வித்துக் கொள்-கி-றோம்.
கே. பாக்யராஜ் அகர கடம்பனூர்.
நாய்கள் தொல்லை
திரு-வா-ரூர் நக-ராட்-சிக்கு உட்-பட்ட கொடிக்கால் பாளை-யத்-தில் பகல் மற்-றும் இரவு நேரங்க-ளில் நாய்-கள் தொல்லை அதி-க-மாக உள்-ளது. தெரு-வில் நடந்து செல்-லும் பொது-மக்களை திடீ-ரென விரட்-டு-கி-றது. சில நேரங்க-ளில் கடித்-தும் விடு-கி-றது. ஆடு, மாடு-க-ளை-யும் விட்டு வைப்-பது இல்லை, அவற்-றை-யும் கடித்து விடு-கின்-றன. இத-னால் தெருக்க-ளில் நடந்து செல்-வ-தற்கு பொது மக்கள் அச்-சப்-ப-டு-கி-றார்கள். எனவே பொது-மக்கள் நலன் கருதி கொடிக்கால்-பா-ளை-யத்-தில் சுற்-றித்-தி-ரி-யும் நாய்-களை பிடித்து அப்-பு-றப்-ப-டுத்த சம்-பந்-தப்-பட்-ட-வர்கள் நட-வ-டிக்கை எடுப்-பார்களா? என்-பது அந்த பகுதி மக்க-ளின் எதிர்-பார்ப்-பாக உள்-ளது.
முகமது கடாபி, கொடிக்கால்பாளையம்.
பஸ் வசதி வேண்டும்
காரைக்கா-லில் இருந்து கோவில் நக-ர-மான மது-ரைக்கு நேரடி பஸ் சேவை இல்லை. மேலும் மது-ரைக்கு செல்ல நாகப்-பட்-டி-னம் அல்-லது கும்-ப-கோ-ணம் வந்து தான் செல்ல வேண்-டும். காரைக்கா-லில் உள்ள மக்க-ளில் அதி-க-மா-னோர் மது-ரைக்கு வியா-பா-ரம் தொடர்-பாக தின-மும் வரு-கின்-ற-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட போக்கு-வ-ரத்து துறை அதி-கா-ரி-கள் திரு-நள்-ளாறு முதல் மதுரை வரை பஸ் இயக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
ரா.கணபதி, காரைக்கால்.
குப்பைகளை அகற்ற வேண்டும்
மயி-லா-டு-துறை டவுன், காந்தி நகர் மூன்-றா-வது பிரிவு சாலை-யில் குப்-பை-கள் குவிந்து கிடக்கி-றது. இந்த குப்-பை-க-ளை-மா-தம் ஒரு முறை கூட அள்-ளு-வ-தில்லை. இத-னால் அந்த பகு-தி-யில் இந்த பகு-தி-யில் துர்-நாற்-றம் வீசு-கி-றது. குப்-பை-கள் தேங்கி கிடப்-ப-தால் அங்கு கொசு-கள் உற்-பத்-தி-யாகி தொற்று நோய் பர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குப்-பை-களை அகற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
காந்திநகர் மக்கள், மயிலாடுதுறை
Related Tags :
Next Story