மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை; டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி சோதனை 24 வழக்குகள் பதிவு


மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை; டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி சோதனை 24 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 21 Sept 2021 11:32 PM IST (Updated: 21 Sept 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், பெட்டி கடைகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வசுந்தராதேவி தலைமையில் டாஸ்மாக் அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
இதில் ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, இலுப்பூர், விராலிமலை, பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகா பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள், பெட்டிக்கடைகள், மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடும் நடவடிக்கை
இந்த சோதனையில் டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) வரதராஜன், கிடங்கு மேலாளர் செல்வராஜ், உதவி மேலாளர் (கிடங்கு) மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும், இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story