திருச்செங்கோட்டில் விவசாய நிலங்களில் புகுந்த கழிவு நீர்


திருச்செங்கோட்டில் விவசாய நிலங்களில் புகுந்த கழிவு நீர்
x
தினத்தந்தி 21 Sep 2021 6:08 PM GMT (Updated: 21 Sep 2021 6:08 PM GMT)

திருச்செங்கோட்டில் விவசாய நிலங்களில் கழிவு நீர் புகுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

எலச்சிபாளையம்:
விவசாய நிலங்களில் கழிவு நீர்
திருச்செங்கோடு நகராட்சியையொட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களையொட்டி சாக்கடை கால்வாய்கள் செல்கின்றன. இதனிடையே கொல்லப்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
இதனால் அதில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறைக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். மேலும் விவசாய நிலங்களில் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், பயிர் சாகுபடியும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சண்முகம் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி நிர்வாகத்தின் கொல்லப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களில் ஆய்வு செய்தனர். அப்போதுஅவர்கள் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
மேலும் விவசாய நிலங்களில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி மற்றும் அதிகாரிகள் குணசேகரன், ஜான்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story