தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 21 Sep 2021 6:23 PM GMT (Updated: 21 Sep 2021 6:23 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
புதுக்கோட்டை  மாவட்டம்,  ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். 
ராமதாஸ், கொத்தமங்கலம், புதுக்கோட்டை.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு 
திருச்சி மாநகராட்சி 40-வது வார்டு எடமலைப்பட்டிபுதூர்  நேரு முதல் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாகுல்அமீது, எடமலைப்பட்டிபுதூர், திருச்சி. 

குடிநீருக்காக ஏங்கும் மக்கள் 
புதுக்கோட்டை கறம்பக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலாவிடுதி பஞ்சாயத்து பட்டமாவிடுதி கிழக்கு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் பொதுகுழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதி மேடாக உள்ளதால் குடிநீர் சரிவர வருவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிடக்கை எடுத்து பட்டமாவிடுதி பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கோவிந்தராசு, பட்டமாவிடுதி, புதுக்கோட்டை.

வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் ஓலையூர் கிராமம் தெற்கு தெருவில் உள்ள சிமெண்டு சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் சாலையில் சென்று வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். 
இதேபோல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஊராட்சி, செங்குட்டை பகுதியில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது, மழைநீர் சாலைகளிலும், வீடுகளிலும் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 சதாசிவம், செங்குட்டை, திருச்சி. 

குண்டும், குழியுமான தார்சாலை 
புதுக்கோட்டை மாவட்டம் குன்னன்டார்கோவில் ஒன்றியம் பெரியதம்பி உடையான்பட்டியில் இருந்து அண்டக்குளம் வரை உள்ள 5 கிலோ மீட்டர் தார்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராமச்சந்திரன், பெரியதம்பிஉடையான்பட்டி, புதுக்கோட்டை.

கொடி இல்லாத பிரம்மாண்ட கம்பம்
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் வளாகத்தில் நவீன வளர்ச்சி பணிகள் ரெயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்டது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய நுழைவு வாயில் முன் பகுதியில் ராட்சத கொடி கம்பம் ஒன்று நிறுவப்பட்டு, அதில் கம்பீரமாக தேசிய கொடி பறந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கொடி சேதமடைந்ததால் அது அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கொடி ஏற்றபடவில்லை. எனவே தேசிய கொடி மீண்டும் கம்பீரமாக பறக்க ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஷேக் அப்துல்லா, பீமநகர், திருச்சி.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
கரூர் மாவட்டம்  சாந்துவார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும். 
பொதுமக்கள், சாந்துவார்பட்டி, கரூர்.

குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி 
பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலம் அவ்வையார் தெருவில் அதிக அளவில் குரங்குகள் தொல்லை உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குரங்குகள் வீடுகளில் புகுந்து திண்பண்டங்கள், மளிகை பொருட்களை எடுத்து சென்றுவிடுகிறது. மேலும் குரங்குகள் குழந்தைகளை கடிக்க வருவதுபோல் பயமுறுத்துகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
செல்வகுமார், துரைமங்கலம், பெரம்பலூர். 

விபத்துகளை தடுக்க உயர்மின் கோபுரம் தேவை 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் உயர் மின்விளக்கு அமைக்கப்படாததால் 4 திசைகளில் இருந்து வரும் வாகனங்களும் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆறுமுகம், சின்னவலையம், அரியலூர்.

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி கே.கே.நகர் காஜாமலை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரபாகரன், காஜாமலை, திருச்சி.

குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்  
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், குன்னுப்பட்டி ஊராட்சி பெருமாள் மலை அடிவாரம் கிராமத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் பல நாட்களாக தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சிவக்குமார், பெருமாள் மலை அடிவாரம், திருச்சி. 

சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் 
திருச்சி 62 வது வார்டில் உள்ள பாத்திமாபுரத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மண்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் பெரிய பள்ளங்களாக உள்ளதால் அதில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். 
 அப்துல் ரகுமான்,  பாத்திமாபுரம், திருச்சி. 

பழுதடைந்த சாலை 
அரியமங்கலம் கிராமத்தில் இருந்து எஸ்.ஐ.டி. செல்லும் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதுடன், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிடக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி.  

டாஸ்மாக் கடை அகற்றப்படுமா? 
திருச்சி மாவட்டம், நாச்சியார் ரோட்டில் டாஸ்மாக்  கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு மதுவாங்கி அருந்த வரும் நபர்கள் மது அருந்துவிட்டு மதுபோதையில் சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சிலர் மதுபோதையில் அரைநிர்வாணத்துடன் படுத்திருப்பதால் அவ்வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி. 

விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி மாவட்டம் சத்திரம்பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி நகரில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும். 
ரத்தினம், காவேரி நகர், திருச்சி.

அடிப்படை வசதிகள் தேவை 
திருச்சி அம்மையப்பா சாய் அவென்யூ என்ற இடத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அம்மையப்பா சாய் அவென்யூ, திருச்சி. 

Next Story