வாய்க்கால் தூர் வாரும் பணியை அமைச்சர் ஆய்வு


வாய்க்கால் தூர் வாரும் பணியை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2021 7:40 PM GMT (Updated: 21 Sep 2021 7:40 PM GMT)

வாய்க்கால் தூர் வாரும் பணியை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

கரூர்
கரூர் மாவட்டத்தில், அமரவாதி ஆற்றின் இடதுகரை வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆண்டாங்கோவில் புதூர், ஆண்டாங்கோவில் கிழக்கு, முனியப்பன்கோவில் அருகே உள்ள கால்வாய் உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், அமராவதி ஆற்றில் இருந்து பாசன வசதி பெறுகின்ற இடதுகரை வாய்க்கால் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அணைப்பாளையத்தில் இருந்து சோமூர் வரை ஏறத்தாழ 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் ரூ.40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு பாசனத்திற்காக அமராவதி நீர் வந்து சேரும் அளவிற்கு தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கால்வாயின் இருபுறங்களும் கரைகளை பலப்படுத்தி பாசனத்தினை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீர்வளத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் ரூ.1.80 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார். மேலும், கூடுதலாக செய்யப்படவேண்டிய பணிகளுக்கும் உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதற்கான நிதியும் இந்த ஆண்டே பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அமராவதி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய வலதுகரை வாய்க்காலில் செட்டிபாளையத்தில் இருந்து மணவாசி வரை 33 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.35 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் மூலம் மண்மங்கலம், கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 5 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றார்.

Next Story