தீப்பெட்டி கழிவுகளில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கழிவுகளில் இருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்சேரி பகுதியில் தீப்பெட்டி கழிவுகளில் இருந்து தீப்பிடித்து எரிவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் அங்கன்வாடியில் இருந்த சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
Related Tags :
Next Story