சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி

சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி
x
தினத்தந்தி 22 Sept 2021 2:12 AM IST (Updated: 22 Sept 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சாமியார்பேட்டை கடற்கரையில் தூய்மை பணி நடந்தது. இதில் 300 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

கடலூா், 

மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் மீனவ கிராமத்தில் சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வேல்விழி தலைமை தாங்கி, கடற்கரை தூய்மை தினம் குறித்தும், திடக்கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளக்கி கூறினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வரவேற்றார்.
300 கிலோ குப்பைமத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் மீனவ கிராமத்தில் சர்வதேச கடலோர தினத்தை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வேல்விழி தலைமை தாங்கி, கடற்கரை தூய்மை தினம் குறித்தும், திடக்கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளக்கி கூறினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வரவேற்றார்.

பின்னர் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் அனந்தராமன், தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் குப்பைகள் சேகரித்தனர். அப்போது சுமார் 300 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டது. பின்னர் அவை சிலம்பிமங்களம் ஊராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் சங்கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

Next Story