தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,254 வேட்பாளர்கள் மனுதாக்கல்
தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று 1,254 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 1,254 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 152 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 986 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 107 பேரும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 9 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே இன்று அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story