ஆர்.கே. பேட்டை அருகே வெடி பொருட்கள் செயலிழக்க வைப்பு


ஆர்.கே. பேட்டை அருகே வெடி பொருட்கள் செயலிழக்க வைப்பு
x
தினத்தந்தி 22 Sept 2021 5:56 AM IST (Updated: 22 Sept 2021 5:56 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டை அருகே வெடி பொருட்கள் செயலிழக்க வைக்கப்பட்டன.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இரும்பு உருக்கு ஆலையில் கடந்த 2008-ம் ஆண்டு வெடிபொருட்கள் விபத்து ஏற்பட்டது. வெளி நாட்டில் இருந்து கும்மிடிப் பூண்டி இரும்பு உருக்கு ஆலை கள் மூலம் எடுத்து வரப்பட்ட பழைய இரும்பு பொருட்கள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள் போன்ற பயங்கர வெடிபொருட்கள் இருந்தது. அப்போது அந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை அகதிகள் கூலித் தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர் இந்த வெடி பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட் டது. இந்த நிலையில் கும்மிடிப் பூண்டியில் இந்த ராக்கெட் லாஞ்சர்கள், வெடி பொருட்களை செயலிழக்கச் செய்ய கூடாது என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். அதனால் வேறு ஒரு இடத்தில் அதனை செயலிழக்கச் செய்ய மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் ஊராட்சி எஸ்.கே.வி.கண்டிகையில் தமிழக எல்லையில் செயல் படும் கல்குவாரியில் வெடி பொருட்களை செயலிழக்கச் செய்ய பத்திரமாக எடுத்து செல்லப்பட்டது.

செயலிழக்க வைப்பு

சென்னை திரிசூலத்தில் இருந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெடிமருந்து செயலிழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் இந்த வெடிபொருட்கள் பாலாபுரம் ஊராட்சியை சேர்ந்த எஸ்.கே.வி.கண்டிகை கல்குவாரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த 7 நாட்களாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள் ளப்பட்ட பின்னர் வெடி பொருட்கள் செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மட்டும் 50-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் செயலிழக்க செய்யப் பட்டுள்ளது. இந்த மாதம் 25-ந் தேதி வரை வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து தண்டோரா மூலம் அறிவித்தனர். வெடி பொருட் கள் செயலிழப்பு காரணமாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெடி சத்தம் கேட்கிறது.

Next Story