மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சா பறிமுதல்


மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sept 2021 4:35 PM IST (Updated: 22 Sept 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மோட்டார சைக்கிளில் கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி:
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை தூத்துக்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கஞ்சா பறிமுதல்
அப்போது, தூத்துக்குடி&திருச்செந்தூர் ரோட்டில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த ஒருவரை தனிப்படையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், ஒரு பையில் சுமார் 11 கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், மதுரை பாசிங்காபுரத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 21) என்பதும், அவர் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 11 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story