அங்கன்வாடி மையங்களுக்கு பதிவுச்சான்று அவசியம்


அங்கன்வாடி மையங்களுக்கு பதிவுச்சான்று அவசியம்
x
தினத்தந்தி 22 Sept 2021 4:42 PM IST (Updated: 22 Sept 2021 4:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு பதிவுச்சான்று அவசியம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு பதிவுச்சான்று அவசியம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
அங்கன்வாடி மையங்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புதுறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழு அலுவலர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். அதன்படி, சமைக்கும் பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சமைக்கும் முன் பாத்திரங்களை வெந்நீரால் கழுவ வேண்டும். உணவு பொருட்களின் காலாவதியாகும் தன்மை அறிந்து முன்கூட்டியே பயன்படுத்த வேண்டும். முட்டைகள் நல்ல நிலையில் இருப்பதை பரிசோதனை செய்ய வேண்டும். உணவு பொருட்கள் சேமிப்பு அறைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், புழு பூச்சிகள் புகாத வகையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை காய்ச்சி வழங்க வேண்டும்.
உணவு சமைக்கும் பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும். போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும். காய்கறிகள், கீரைகள், அரிசி, பருப்பு வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும். 
பதிவுச்சான்று அவசியம்
காய்கறிகளை வெந்நீரில் கழுவ வேண்டும். ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் உணவு பாதுகாப்பு துறையினரால் வழங்கப்படும் பதிவுச்சான்று அவசியம் பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி மையம் அனைத்தும் உணவு பாதுகாப்புத்துறையின் சுகாதார மதிப்பீடு திட்டத்தின் சான்றிதழ் பெற வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் 5 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார மதிப்பீடு திட்டத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது. 



Next Story