நிவாரணம் வழங்க வேண்டும்


நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Sept 2021 5:03 PM IST (Updated: 22 Sept 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

நிவாரணம் வழங்க வேண்டும்

திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், திருப்பூர் மாவட்ட பூசாரிகள் சமூக நல சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது 
தனியார் கோவில் பூசாரிகளான நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோவில்கள் பூட்டப்பட்டு பக்தர்கள் வராமல் இருப்பதால், வருமானம் இன்றி தவித்து வருகிறோம். ஆனால் அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனா முழு ஊரடங்கின் போது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு மட்டும் சலுகை, நிவாரணத்தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. 
எனவே அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை, சலுகைகள் போல் எங்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story