திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மைப்பணி


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மைப்பணி
x
தினத்தந்தி 22 Sep 2021 12:55 PM GMT (Updated: 22 Sep 2021 12:55 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தூய்மைப்பணி நடந்தது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 43, 44, 45, 48, 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க இரு அணிகள் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தில் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியினை மேற்கொண்டனர். கல்லூரி முதல்வர் மகேந்திரன், கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர். 2&ம் ஆண்டு மாணவர்கள் சுமார் 400 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர். மேலும் புதர் செடிகள், சீமை கருவேல மரங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றையும் அப்புறப்படுத்தினர்.
நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் கதிரேசன், மருதையா பாண்டியன், அபுல்கலாம் ஆசாத், கவிதா, ஜெயராமன், அந்தோணி சகாய சித்ரா, பார்வதி தேவி, அலுவலக கண்காணிப்பாளர் பொன்னுதுரை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story