கோவில்பட்டியில் செல்போன் திருடிய வாலிபர் கைது


கோவில்பட்டியில் செல்போன் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 6:47 PM IST (Updated: 22 Sept 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் முத்துலட்சுமி (வயது 21) . இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூர்யா (23) என்பவர் முத்துலட்சுமியின் செல்போனை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து  சூர்யாவை கைது செய்து, அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார்.

Next Story