தங்கும் விடுதிகளுக்கே சென்று வடமாநிலத்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
வேலூரில் தங்கும் விடுதிகளுக்கே சென்று வடமாநிலத்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு தட்டுப்பாட்டால் பலர் 2&வது டோஸ் போடமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்
வேலூரில் தங்கும் விடுதிகளுக்கே சென்று வடமாநிலத்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு தட்டுப்பாட்டால் பலர் 2-வது டோஸ் போடமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுத்திடும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடாமல் உள்ளதால் தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். அவர்கள் மூலம் கொரோனா பரவ அதிகமாக வாய்ப்புஉள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பகுதியாக தங்கும் விடுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர்.
விடுதிகளுக்கே சென்று...
வேலூர் தோட்டபாளையம் பகுதியில் சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன் தலைமையில் மருத்துவ குழுவினர் தங்கும் விடுதிகள் மற்றும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இல்லை. கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளே உள்ளது. அவை தான் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் பொதுமக்களுக்கு முதல் மற்றும் 2&வது டோஸ் செலுத்தப்படுகிறது. கடந்த 19&ந் தேதி அன்று கோவிஷீல்டு மருந்துகள் காலியாகி விட்டது.
எனவே நேற்று வரை 3 நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இல்லாததால் முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் 2&வது டோஸ் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story