தேனி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி:
தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஆட்குறைப்பு என்ற பெயரில் வேலையை விட்டு நிறுத்தப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதிய உயர்வு நாள் ஒன்றுக்கு ரூ.424 வழங்க வேண்டும்.
மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story