திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,819 பேர் வேட்புமனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,819 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 3,919 பேர் மனுதாக்கல் செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,819 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 3,919 பேர் மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனுதாக்கல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு, 125 ஊராட்சி ஒன்றிய வார்டு, 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான மனுதாக்கல் கடந்த 15&ந் தேதி தொடங்கியது. தி.மு.க., அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நேற்று காலை முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் படைசூழ வந்து வேட்புமனுதாக்கல் செய்ய ஆரம்பித்தனர்.
7,819 பேர்
இதனால் 6 ஒன்றியங்களிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், கூட்டமாக காணப்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டு இருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நேரமான மாலை 5 மணி வரை அனைத்து ஒன்றியங்களிலும் வேட்புமனுக்கள் பெறப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 79 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 478 பேரும், ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 506 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,850 பேரும் என நேற்று மட்டும் ஒரே நாளில் 3,913 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை 6 ஒன்றியங்களிலும் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 104 பேரும், 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 683 பேரும், 208 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1,118 பேரும், 1,779 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,914 பேர் என மொத்தம் 7,819 பேர் வேட்புமனுதாக்கல் செய்து உள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story