டெங்கு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


டெங்கு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sept 2021 12:05 AM IST (Updated: 23 Sept 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆற்காடு புதுத்தெருவில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வீடு வீடாக சென்று பார்வையிட்டு டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது என்பது குறித்து குடியிருப்பவர்களிடம் கேட்டு விளக்கிக் கூறினார். 

மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தெருக்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டன. நகராட்சி பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகளிலும் டெங்கு தடுப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுத் தெருவில் இருந்த அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, பொறியாளர் கணேஷ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story