பெண்ணை தாக்கியதாக 2 பேர் கைது


பெண்ணை தாக்கியதாக 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2021 12:09 AM IST (Updated: 23 Sept 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

வீடுபுகுந்து பெண்ணை தாக்கியதாக 2 பேர் கைது.

எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே உள்ள அரியாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டியப்பன் மனைவி அழகம்மாள் (வயது 39). கணவன்& மனைவி 2 பேரும் கருத்துவேறுபாடு காரணமாக 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் இடத்தகராறு காரணமாக இதே ஊரில் உள்ள பெருமாள், சாந்தி, சிவா, வசந்தாள் ஆகியோருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் 4 பேரும் சேர்ந்து வீட்டில் இருந்த அழகம்மாள் மற்றும் அவரது 15 வயது மகளை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியாண்டிபட்டி கிரமத்தை சேர்ந்த பிச்சன் மகன் சிவா (வயது19) , பெருமாள் மகன் பெருமாள் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story