கஞ்சா விற்ற 7 பேர் கைது


கஞ்சா விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2021 12:25 AM IST (Updated: 23 Sept 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் கஞ்சா விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீசார் மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் சந்தேகம் அடையும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் விசாரித்த போது அவர்கள் மீனம்பட்டியை சேர்ந்த மணிமாறன் (வயது 20), ஹரிஹரன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலா 150 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி டவுன் போலீசார் சரஸ்வதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் (21) என்பவரை போலீசார் கைது செய்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் போலீசார் வண்ணான்குளம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த பிச்சை (71) என்பவர் 200 கிராம் கஞ்சாவை விற்பனை செய்தவதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதிவீரன்பட்டியை சேர்ந்த அரவிந்த் (23), திருத்தங்கல் தனியார் பள்ளியின் அருகில் கஞ்சா விற்ற பாண்டியன்நகரை சேர்ந்த மாரீஸ்வரன் (39), திருத்தங்கல் மேற்குரதவீதி பகுதியில் கஞ்சா விற்ற வடக்கு ரதவீதியை சேர்ந்த சென்றாயன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story