மாவட்ட செய்திகள்

கிரேன் மோதி முதியவர் பலி + "||" + death

கிரேன் மோதி முதியவர் பலி

கிரேன் மோதி முதியவர் பலி
சிவகாசியில் கிரேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 57). இவர் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் ஒன்று  முனியாண்டி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் முனியாண்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது மகன் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேனை ஓட்டி வந்த அம்மன்கோவில்பட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷ்பாண்டியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மொபட்டில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு
மொபட்டில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
2. கார் மோதி ஒருவர் பலி
வெம்பக்கோட்டை அருகே கார் மோதி ஒருவர் பலியானார்.
3. மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்து பெண் பலி
மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்.
4. மொபட்டில் சென்ற தம்பதி பலி
மொபட்டில் சென்ற தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
5. மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.