ஆலங்குடியில் கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை


ஆலங்குடியில் கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Sept 2021 12:54 AM IST (Updated: 23 Sept 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே குப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் சதீஷ் (வயது 33). இவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பேராவூரணி வீரக்குடியை சேர்ந்த ராதிகாவுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்&மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சதீஷ் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சதீசை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story