ரூ.45 லட்சம் குட்கா பறிமுதல்


ரூ.45 லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sept 2021 1:32 AM IST (Updated: 23 Sept 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

ரூ.45 லட்சம் குட்கா பறிமுதல்

சேலம், செப்.23-
பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் அலுவலர்கள் சேலம்&பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவட்டிப்பட்டி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. 
பின்னர் மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சேலம் மாவட்டம், மேச்சேரி வெள்ளார் வெள்ளப்பம்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 38) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. 
குட்கா பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து ரூ.45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டிரைவர் பெரியசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.45 லட்சம் குட்கா பொருட்கள் கடத்த முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story