மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Sept 2021 2:08 AM IST (Updated: 23 Sept 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் வராமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுசம்பந்தமாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள், பொதுமக்கள் த.மு.மு.க. மாவட்ட தலைவர் அப்பாஸ் ஹில்மி, பொருளாளர் ஜாபர் ஆகியோர் தலைமையில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story