அரசு பெண் ஊழியரிடம் கவரிங் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


அரசு பெண் ஊழியரிடம் கவரிங் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2021 2:21 AM IST (Updated: 23 Sept 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அரசு பெண் ஊழியரிடம் கவரிங் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் யூ.வி.நகரைச் சேர்ந்தவர் சுப்பு மனைவி தேவி (வயது 35). இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணும் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்துச் சென்றனர். 

இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தைச் சேர்ந்த மகாராஜன், பாவூர்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பாளையங்கோட்டை திருமால்நகர் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்த பலவேசம் (24) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Next Story