தடுப்பூசி போட்டவர்களுக்கு சிறப்பு பரிசு


தடுப்பூசி போட்டவர்களுக்கு சிறப்பு பரிசு
x
தினத்தந்தி 23 Sept 2021 2:45 AM IST (Updated: 23 Sept 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் நகராட்சியில் தடுப்பூசி போட்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியில் கடந்த 19-ந் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிட பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் நகராட்சியில் நடைபெற்றது. காதர் மைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கோல்டு கிமிரி நிறுவன உரிமையாளர் மக்தும் கலந்து கொண்டு கிரைண்டர் மற்றும் மிக்ஸி ஆகிய பரிசுகளை வழங்கி, பரிசு பெற வேண்டியவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகளை வழங்கினார்.

இதில் கிரைண்டர் முத்துகிருஷ்ணாபுரம் சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கும், மிக்ஸி காளியம்மன் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்த ருக்குமணி என்பவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் பாரிஜான் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story