குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு


குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிப்பு
x
தினத்தந்தி 23 Sept 2021 2:59 AM IST (Updated: 23 Sept 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றுவிட்டு குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக கார் டிரைவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: பெங்களூருவில் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றுவிட்டு குடிபோதையில் இருந்த வடமாநில இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக கார் டிரைவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநில இளம்பெண்

பெங்களூரு முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர், வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். நேற்று முன்தினம் இரவு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசிக்கும் நண்பர்கள் வீட்டுக்கு இளம்பெண் சென்றிருந்தார். அங்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில் இளம்பெண் பங்கேற்றிருந்தார். நள்ளிரவு முதல் நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் மதுஅருந்தியதாக தெரிகிறது. பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டுக்கு வாடகை காரில் புறப்பட்டார்.

அப்போது அந்த இளம்பெண் குடிபோதையில் இருப்பதையும், காரின் கதவை திறக்க முடியாமல் சிரமப்படுவதையும் கார் டிரைவர் தெரிந்து கொண்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் முருகேஷ் பாளையாவுக்கு சென்ற போதும், காரில் இருந்து இறங்க முடியாமல் இளம்பெண் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, குடிபோதையில் இருந்த இளம்பெண்ணை முருகேஷ் பாளையாவில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு டிரைவர் அழைத்து சென்றதாக தெரிகிறது.

கற்பழிப்பு

பின்னர் அந்த இளம்பெண்ணை கார் டிரைவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இளம்பெண்ணின் வீட்டில் விட்டுவிட்டு டிரைவர் சென்றதாகவும் தெரிகிறது. நேற்று காலையில் இதுபற்றி அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக ஜீவன்பீமாநகர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இளம்பெண் வந்த காரின் பதிவு எண் மூலமாக டிரைவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் கார் டிரைவரான தேவராஜை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இளம்பெண்ணுக்கும் பவுரிங் ஆஸ்பத்திரியில் மருத்துவமனை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கைதான தேவராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story