காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கணவரை ஆணவ கொலை செய்ததாக இளம்பெண் போலீசில் புகார்


காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கணவரை ஆணவ கொலை செய்ததாக இளம்பெண் போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 Sept 2021 2:49 PM IST (Updated: 23 Sept 2021 2:49 PM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கணவரை ஆணவ கொலை செய்ததாக இளம்பெண்போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா ஆவூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமுலு (வயது 29). இவர் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 8 ஆண்டுகள் நர்சாக பணியாற்றிய நான், கும்மிடிப்பூண்டி தாலுகா காரணி கிராமத்தைச் சேர்ந்த கவுதமன் (32) என்பவரை அவர்களது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்தேன்.

கடந்த மாதம் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், குடும்பத்துடன் ஆவூர் கிராமத்திற்கே குடியேறி தாங்கள் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 17-ந் தேதி காலை தனது கணவரின் தாத்தா இறந்து விட்டதாக வந்த தகவலையடுத்து, இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள காரணி கிராமத்திற்கு கவுதம் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கணவர் கவுதமன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

எனது கணவரை ஆணவக்கொலை செய்து தனக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்து விட்டதாக சந்தேகப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயவேலு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story