கியாஸ் கசிவால் சுவீட் கடையில் தீ விபத்து - வாலிபர் காயம்
பெரம்பூரில் கியாஸ் கசிவால் சுவீட் கடையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வாலிபருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பெரம்பூர்,
சென்னை ஏழுகிணறு அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சின்னசாமி. இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஜெகதீஸ் (வயது 45) என்பவர் சுவீட் கடை நடத்தி வந்தார். இந்த கடையில் அஜித்குமார் (26) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அஜித்குமார், சுவீட் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது கியாஸ் கசிவால் திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த எஸ்பிளனேடு, வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் கடையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் சுவீட் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் அஜித்குமாரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது.
அவர், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீயின் வெப்பம் தாங்காமல் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறின. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story