நல்லம்பள்ளி அருகே வழிப்பாதையை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
நல்லம்பள்ளி அருகே வழிப்பாதையை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மல்லிசெட்டிகொட்டாய் கிராமத்தில் 100&க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் கற்கள் வைத்து அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. வழிப்பாதையை மீட்டுத்தர கோரி கிராம மக்கள் நேற்று ஜருகு-ஈசல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சர்மிளாபானு ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வழித்தட பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள்போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story