திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு


திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு
x
தினத்தந்தி 23 Sept 2021 5:41 PM IST (Updated: 23 Sept 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

முத்தூர் பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று வேளாண்மைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முத்தூர் 
முத்தூர் பகுதிகளில்  திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று வேளாண்மைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர் சின்னமுத்தூர் ஊடையம் வேலம்பாளையம் பூமாண்டன்வலசு வள்ளியரச்சல் ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதன்படி இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நெல் நாற்று நடவு பணியில் முதல் கட்டமாக நெல் நாற்றுகள் விடுவதற்காக ஐ.ஆர்.20 கோ 41 கோ 43 டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரக விதை நெல்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து தயாராக வைத்து உள்ளனர்.
இதுபற்றி வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருந்திய நெல் சாகுபடி
 ஒற்றை நாற்று எனும் திருந்திய நெல் சாகுபடி பணி இந்த ஆண்டு செய்வதற்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடியின் நன்மைகள், வேளாண் தொழில் நுட்பங்கள் விதை நெல் விடுதல், நெல் நாற்று நடவு, அடி உரம், மேல் உரம் இடுதல், திரவை எந்திரம் மூலம் களைக்கொல்லி மேலாண்மை கடைபிடித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை பணிகள் ஆகியவை செய்யப்படும் வழிமுறைகள் பற்றி வேளாண்மைத்துறை மூலம் வயல்வெளி கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் நேரில் பல்வேறு ஆலோசனைகள் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு நஞ்சை சம்பா மொத்த நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதிகளில் மீதம் உள்ள 20 சதவீதம் அளவுகளில் வழக்கம்போல் சாதாரண முறையிலான நெல் நாற்று நடவு பணிகள் நடைபெறும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story