50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்


50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Sept 2021 5:44 PM IST (Updated: 23 Sept 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அரசு போட்டி தேர்வு மாணவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
நாங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். தற்போது பெண்களுக்கு 40 சதவீதம் உள் ஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் சமூகநீதி கோட்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டால், ஆண்களின் அரசு பணி கனவு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே பெண்களுக்கான உள் ஒதுக்கீடு என்ற சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் சரிசமமாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் ஆண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story