மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 மருத்துவ வாகனங்கள் - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 மருத்துவ வாகனங்கள் - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Sept 2021 8:35 PM IST (Updated: 23 Sept 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 மருத்துவ வாகனங்களை கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் 5 மருத்துவ வாகனங்களை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் நாகை மாவட்டத்தில் முதல்முறையாக வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தலைஞாயிறு, திருப்பூண்டி, தேவூர், வடுகச்சேரி, திருமருகல் ஆகிய 5 மருத்துவ வட்டாரங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வாயிலாக ஒரு மருத்துவ வட்டாரத்துக்கு ஒரு வாகனத்தில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கப்படும். இதில் ரத்த கொதிப்பின் அளவு மற்றும் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நாகைமாலி எம்.எல்.ஏ., சுகாதாரப்பணிகள் துணைஇயக்குநர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல கலெக்டர் அருண்தம்புராஜ் வேதாமிர்த ஏரியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்தார்.

வேதாரண்யம்- நாகை சாலையில் 17 ஏக்கர் பரப்பளவில் வேதாமிர்த ஏரி உள்ளது. இந்த ஏரி ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஏரி முழுமையாக தூர்வாரப்பட்டு சுமார் ரூ.10 கோடியில் சுற்றுசுவர் அமைத்து படித்துறை அமைக்கப்பட்டு நடைபாதை மற்றும் அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேதாரண்யம் ஆர்.டி.ஓ. துரைமுருகன், நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.


Next Story