முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - தஞ்சை கலெக்டர் தகவல்
முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை கலெக்டர் கூறி உள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர்,
ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடூனில் உள்ளது. இந்த கல்லூரியில் ஜூலை 2022-ம் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதன் விவரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.ri-mc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவேண்டும். 1-7-2022-ந்தேதி 11½ வயது முதல் 13 வயதை அடையாதவர், 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது 7-ம் வகுப்பு பயில்பவராக இருக்கும் அனைத்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், “படைவீரர் சங்கங்களுடன், புதுடெல்லியில் உள்ள ராணுவ அமைச்சக முன்னாள் படைவீரர் நலத்துறை செயலாளர் கலந்துரையாடல் நடத்தினார். இதில் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் மனைவியின் பெயர்களை ஓய்வூதிய கொடுப்பாணையில் பதிவு செய்யாததால், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதில் சிரமங்கள் உள்ளது கண்டறியப்பட்டது.
அதன்அடிப்படையில் முன்னாள் படைவீரர் நல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணையில் மனைவியின் பெயரை பதிவு செய்யாத முன்னாள் படைவீரர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். எனவே முன்னாள் படைவீரர்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேலை நாட்களில் ஆஜராகி மனைவியின் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.
Related Tags :
Next Story